Categories
சினிமா தமிழ் சினிமா

தன்னைத்தானே செருப்பால் அடித்த பாலா… அதிரடி வார்னிங் கொடுத்த கமல்… பரபரப்பா வெளியான மூன்றாம் புரோமோ…!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜி  தன்னைத்தானே செருப்பால் அடித்து கொண்டது குறித்து அவருக்கு கமல் எச்சரிக்கை விடுக்கிறார்.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனின்  ஆரம்பத்திலிருந்தே போட்டியாளர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று நடந்த ரேங்க் டாஸ்க்கின் போது சனம் மற்றும் பாலாவுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது திடீரென கோபத்தில் தன் காலில் போட்டிருந்த செருப்பை கலட்டி தன் கன்னத்தில் அடித்துக் கொண்டார் பாலாஜி . இவரின் இந்த செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .

இந்நிலையில் இன்று வெளியான மூன்றாவது புரோமோவில் பாலாஜிக்கு கமல் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில் ‘இந்த கொரோனா காலத்தில் வெளியே போட்டுக்கொள்ள ஒரு செருப்பு, வீட்டுக்குள் போட்டுக்கொள்ள ஒரு செருப்பு என இரண்டு செருப்பு வைத்திருக்கிறார்கள் ஆனால் பாலா மூன்றாவதாக மூஞ்சில அடித்துக்கொள்ள ஒரு செருப்பு வைத்துள்ளார்’ என கமல் கூற பாலாவின் முகம் சுருங்குகிறது. மேலும் வயலன்ஸில் விளிம்பு அது இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என அதிரடியாக பேசுகிறார் கமல் . இதையடுத்து பாலாஜி என்ன பதில் கூறுவார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் .

Categories

Tech |