Categories
மாநில செய்திகள் வானிலை

“இந்தா வந்துட்டுல்ல” அடுத்த 12 மணி நேரத்தில்…. மிக முக்கிய எச்சரிக்கை…!!

அடுத்த 12 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக்க உள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை தெரிவித்துள்ளது.

மன்னார் வளைகுடா பகுதியில் கடந்த 12 மணி நேரமாக நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்று பிற்பகலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது. இதன் காரணமாக இன்று கடலூர், அரியலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்தது.

அதேபோன்று நாளை ராமநாதபுரம், மதுரை, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு சில மாவட்டங்களிலும் மிதமான மலை பெய்து வருகின்றது. இந்நிலையில் புரெவி குறித்து மாநில பேரிடர் மேலாண்மை கூடுதல் தகவலை வெளியிட்டுள்ளது.

இவ்வாறு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மன்னார் வளைகுடாவின் ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதியில் கடந்த 33 மணி நேரமாக நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது ராமநாதபுரத்திற்கு தென்மேற்கே 40 கிலோமீட்டர் தூரத்திலும், பாம்பனுக்கு மேற்கு – தென்மேற்கு பகுதியில் 70 கிலோமீட்டர் தூரத்திலும் நிலை கொண்டிருக்கிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருமாறும்” என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |