அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சம் தொட்டுள்ளது அந்நாட்டு மக்களிடையே பெரு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகிற்கே பெரிய சவாலாக இருந்து வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. இந்நிலையில் எப்படியாவது தடுப்பு மருந்து கண்டுபிடித்து, கொரோனாவை விரட்டி அடிக்க வேண்டும் என்று ஒவ்வொரு நாட்டு ஆராய்ச்சியாளர்களும் ஒரு வினாடி கூட வீணாக்காமல் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து சில மருந்து நிறுவனங்கள் கண்டுபிடித்துள்ள தடுப்பு மருந்துகள் 100% வெற்றியை அடைந்துள்ளது. இந்த மருந்துகள் ஒரு சில நாடுகளில் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன.
இப்படி இருக்கையில் அமெரிக்கா என்பது, நம் ஒவ்வொருவருக்கும் அங்கு சென்று பணி புரிய வேண்டும் என்று வாழ்க்கையில் வரும் கனவாக இருக்கும். இப்படி கனவுகளில் வந்து போகும் அளவிற்கு உலகிலேயே வல்லரசு நாடான அமெரிக்காவில் தற்போது கொரோனா கோரத்தாண்டவமாடி வருகின்றது. அங்கு அனைத்து நவீன வசதிகளும், சுகாதார கட்டமைப்புகளும், மக்களிடையே விழிப்புணர்வும் இருந்தும் கூட கொரோனா வேகமெடுத்து வருகின்றது.
கடந்த சில நாட்களாகவே தினம்தோறும் பாதிப்பை ஏற்படுத்தும் கொரோனா விகிதம் தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்வது அமெரிக்க நாட்டு மக்களை நடுங்க வைத்துள்ளது. தொடக்க காலத்தில் நாள் ஒன்றுக்கு 30 ஆயிரம், 40ஆயிரம், 50ஆயிரம் என்று பதிவாகிய இந்த எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து தற்போது 1 லட்சம், 1.50 லட்சம் என தற்போது 2 லட்சத்தை மிஞ்சியுள்ளது வேதனையின் உச்சமாக பார்க்கப்படுகின்றது. நேற்று முன்தினம் மட்டும் இதுவரை இல்லாத அளவாக 2,20,643 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் நேற்று அதையும் மிஞ்சும் அளவுக்கு 2,35, 272பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகளவில் எல்லா நாடுகளிலும் கொரோனாவை ஓரளவிற்கு கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் அமெரிக்காவில் மட்டும் இதன் ஆட்டம் சற்றும் குறையாமல் அதிகரித்து கொண்டேபோகின்றது. ஆனாலும் அமெரிக்க அரசு எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு என்ன காரணம் என்னவென்று தெரியவில்லை. இதனால் அமெரிக்காவானது மக்கள் வாழ தகுதியற்ற நாடாக மாறிவிடுமோ என்ற அச்சம் நிலவியுள்ளது. அமெரிக்காவின் இந்த பொறுப்பற்ற நிலையை கண்டு உலக நாடுகள் மிரண்டு வருகின்றன.
தற்போது அமெரிக்காவில் மொத்த பாதிப்பு 14,788,782 ஆகும். புதிதாக 2,718 பேர் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்பு 285,550 லட்சத்தை கடந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 4,55,915 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது அமெரிக்க மக்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எப்படி இருந்தாலும் நம் மனித சமூகம் கொரோனாவை வீழ்த்தும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.