Categories
தேசிய செய்திகள்

14 வயது சிறுமி… 3 பேர்… கடத்திச் சென்று விடியவிடிய காட்டில்… சிறுமியின் அவலநிலை..!!

உத்தரகாண்ட் அருகே 14 வயது சிறுமியை கடத்தி கொண்டு சென்று காட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்தவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

உத்தரகாண்ட் மாநிலம் நைனிடாலைச் சேர்ந்த 14 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். சிறுமியின் பெற்றோர்கள் காலையில் வேலைக்கு சென்று மாலையில் வீடு திரும்புவார்கள். அதுவரை சிறுமி வீட்டில் தனியாக இருப்பார். இதனை நோட்டமிட்ட அங்கிருந்த இளைஞர்கள் கடந்த புதன்கிழமை அன்று வீடு புகுந்து அந்த சிறுமியை கடத்தி சென்றுள்ளனர். பின்னர் அருகிலுள்ள காட்டிற்கு கொண்டு சென்று அந்த சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.

இதையடுத்து இதனை வெளியில் யாரிடமாவது கூறினால் உன்னை கொன்று விடுவோம் என்று கூறி மிரட்டி விட்டு சிறுமியை அங்கேயே விட்டு விட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் பெற்றோர்கள் குழந்தையை காணவில்லை என்று அருகில் இருந்த காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காட்டில் அந்த வழியாக சென்றவர்கள் அந்த சிறுமியைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின்பேரில் பதறி அடித்துக் கொண்டு வந்த பெற்றோர்கள் சிறுமியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதை கூறினார். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள மூன்று பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். வட மாநிலங்களில் இதுபோன்ற வன்முறை சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. முக்கிய குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப் பட்டாலும் இதுபோன்ற சம்பவங்கள் குறைந்தபாடில்லை.

Categories

Tech |