மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு நாளை ஒட்டி அதிமுக பெண்கள் சபதம் எடுத்துள்ளனர்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி மாநிலம் முழுவதும் நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து கோவைபுதூர் மைதானத்தில் அதிமுக ஆட்சி தொடர 2 ஆயிரம் விளக்குகளை ஏற்றி பெண்கள் சபதம் ஏற்றனர்.
தொடர்ந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். 2 ஆயிரம் விலக்குடன் மிளிர்ந்த கோவை புதூர் மைதானத்தில் பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு களித்தனர்.