ட்ரம்பின் அண்ணன் மகள், ட்ரம்ப் செய்த குற்றங்களுக்காக அவரை தண்டிக்க வேண்டும் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்களின் மோசமான மறுபக்கம் பற்றி, “DO MUCH AND NEVER ENOUGH” என்ற புத்தகத்தை அவருடைய அண்ணன் மகளும், மனோதத்துவ நிபுணருமான மேரி டிரம்ப் என்பவர் எழுதியுள்ளார். இந்நிலையில் மேரி அளித்துள்ள பேட்டியில், “அமெரிக்க முன்னாள் அதிபர்கள் மீது எந்த வழக்கும் தொடர கூடாது என்ற விதியை ட்ரம்ப் விஷயத்தில் ஒருபோதும் கண்டிப்பாகக் கடைபிடிக்க கூடாது.
ஏனென்றால் ட்ரம்ப் மிக கொடூரமானவர், நம்பிக்கை துரோகி, அமெரிக்காவில் கொரோனா பரவலை சரிவர கையாளாமல், லட்சக்கணக்கான மக்கலின் உயிர்களை பலி கொடுத்தவர். இதுபோல அவர் செய்த பல குற்றங்களுக்கு நீதிமன்றத்தில் நிறுத்தி அவரை தண்டிக்க வேண்டும். தேர்தலில் தான் தோல்வியடைந்த பிறகும், தோல்வியை ஏற்காமல் பிடிவாதமாக இருக்கிறார்.
இதிலிருந்தே அவருடைய குணத்தை நாம் அறிந்து கொள்ளலாம். தன் வாழ்நாளில் ஒருபோதும் நேர்வழியில் செயல்படாத ஒருவறால் மட்டும் தான் இப்படித்தான் நடந்து கொள்ள முடியும். நான் பல வருடங்களுக்குப்பின் 2017ம் வருடம் சந்தித்தபோது கூட அவருடைய குணங்கள் கொஞ்சம் கூட மாறவில்லை என்பதை உணர்ந்து கொண்டேன்” என்று ஆவேசமாக கூறியுள்ளார்.