தமிழகத்தின் காங்கிரஸ் தலைவரான கே.எஸ் அழகிரிக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை எடுத்துள்ளது. அதனால் கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் முதலில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து கொண்டே வருகிறது. ஆனால் கொரோனா பாதிப்பால் மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் மற்றும் அமைச்சர்கள் என மக்கள் பிரதிநிதிகள் பலரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் தமிழகத்தின் காங்கிரஸ் தலைவரான கே.எஸ்.அழகிரிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அதுமட்டுமன்றி அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை கட்டாயம் செய்துக்கொள்ள வேண்டும் என தமிழக காங்கிரஸ் ஊடகத் துறை தலைவர் கோபண்ணா வேண்டுகோள் விடுத்துள்ளார்.