Categories
சினிமா தமிழ் சினிமா

நிஷாவுக்கு ரகசியம் சொன்ன கமல்… கண்கலங்கிய அர்ச்சனா … என்ன காரணம் தெரியுமா?

பிக்பாஸில் இன்று வெளியான இரண்டாவது புரோமோவில் நிஷாவுக்கு நடிகர் கமல் ரகசியம் கூறியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நாலாவது சீசன் 60 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வாரமும் மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்ற போட்டியாளர் வீட்டிலிருந்து வெளியேற வேண்டும் . இந்த வாரம் வீட்டிலிருந்து வெளியேற நாமினேட் ஆனவர்கள் ஆரி ,அனிதா ,சனம், சிவானி, ரம்யா பாண்டியன, நிஷா ,ஆஜித் . இந்நிலையில் நேற்று ஆரி மற்றும் ரம்யா பாண்டியன் சேவ் செய்யப்பட்டதாக கமல் அறிவித்தார் .

இதையடுத்து இன்று வெளியான இரண்டாவது புரோமோவில் ஹெல்த் செக்கப் டாஸ்க்கை ரகசியமாக பாதுகாத்தோம் என ஹவுஸ் மேட்ஸ் கூற நானும் ஒரு ரகசியம் சொல்றேன் என்ற கமல் நிஷா சேவ் செய்ய்ப்பட்டார் என்கிறார். இதைக் கேட்ட அர்ச்சனா அதிகளவு சந்தோசத்தில் கண் கலங்கினார் . மேலும் அர்ச்சனா ‘நிஷா சேவ் செய்யப்பட்டதில் எங்களுக்கு மகிழ்ச்சி . அவளைத் தொலைத்து விடுவோமோ என்ற கவலையில் இருந்தேன்’ என்று கூறினார். இதையடுத்து பேசிய கமல் நீங்களும் நிஷாவை தேடி கொண்டிருந்தீர்களா? நாங்களும் தேடிக் கொண்டிருக்கிறோம் என சிரிப்புடன் கூறுகிறார்.

Categories

Tech |