Categories
தேசிய செய்திகள்

 அம்பேத்கர் நினைவு நாள் இன்று… பிரதமர் மோடி மரியாதை…!!

 டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளான இன்று பிரதமர் மோடி ட்விட்டர் மூலமாக அவருக்கு மரியாதை செலுத்தினார்.

சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரின் 64 ஆவது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி அவருக்கு அரசியல் கட்சி தலைவர்களும் பல்வேறு தரப்பினரும் மரியாதை செலுத்தி வருகிறார்கள். மும்பை சைத்யபூமியில் உள்ள அவரது நினைவிடத்தில் ஏராளமானோர் காலை முதல் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மேலும் அவரது நினைவுகளை புகைப்படங்களுடன் இணைத்து சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். அவர் விடுதலைக்குப் பிறகு நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவி வகித்தார். மேலும் ஆசிரியர், இதழாளர், எழுத்தாளர் மற்றும் சமூக நீதி புரட்சியாளராக விளங்கினார். அவருக்கு இந்தியாவின் மிகச் சிறந்த விருதான பாரத ரத்னா விருது இவரது இறப்புக்குப் பின் 1990 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

இதனையடுத்து பிரதமர் நரேந்திர மோடி டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி அவரை நினைவுகூர்ந்து ட்விட்டர் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “டாக்டர் அம்பேத்கரின் எண்ணங்கள் மற்றும் இலட்சியங்கள் மக்களுக்குத் தொடர்ந்து வலிமை தருகின்றன. நம் தேசத்திற்காக அவர் கண்ட கனவுகளை அனைத்தையும் நிறைவேற்ற நாம் கடமைப்பட்டுள்ளோம்”என்று அவர் கூறியுள்ளார்

Categories

Tech |