ஒரே மருத்துவமனையில் ஏராளமான குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் ஷாடோல் மாவட்டத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 13 குழந்தைகள் கடந்த 8 நாட்களில் உயிரிழந்துள்ளனர். நவம்பர் 27ம் தேதி முதல் 30 வரை ஆறு குழந்தைகளும், டிசம்பர் 1ம் தேதி முதல் 3 தேதி வரை ஐந்து குழந்தைகளும், வெள்ளிக்கிழமை அன்று இரண்டு குழந்தைகளும் பலியாகி உள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக கடந்த நவம்பர் 30 ஆம் தேதி முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே மேலும் 7 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். சரியான சிகிச்சை இல்லாததால் குழந்தைகள் உயிரிழந்தனரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகின்றது. தேவையேற்படின் சிறப்பு மருத்துவர்கள் ஜாபல்பூரில் இருந்து ஷாடோலுக்கு அனுமதிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர். குழந்தைகள் உயிரிழந்ததற்கு ஒரு காரணம் எதுவும் கண்டறியப்படவில்லை.
இதுகுறித்து தலைமை மருத்துவர் ராஜேஷ் பாண்டே கூறுகையில் உயிரிழந்த குழந்தைகளுக்கு நிமோனியா பிரச்சனை இருந்துள்ளது. அதே சமயம் சிகிச்சைக்காக தாமதமாக வந்துள்ளனர். ஒவ்வொருவரும் உத்திரபிரதேசத்தின் அருகில் குக்கிராமங்களில் இருக்கின்றன. அங்கிருந்து மக்கள் வருவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். உரிய நேரத்தில் சிகிச்சைக்காக தங்கள் குழந்தைகளை அழைத்து வராத காரணத்தினால் குழந்தைகள் உயிரிழப்பதாக அவர் கூறினார்.