தையல் தொழிலாளி ஒருவர் எழுதியுள்ள நாவலுக்கு அமெரிக்க பல்கலைக்கழகம் விருது வழங்கி கௌரவித்துள்ளது.
திருப்பூரைச் சேர்ந்த தையல் தொழிலாளி சிவராஜ். இவர் பனியன் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர் “சின்னானும் ஒரு குருக்கள் தான்” என்று ஒரு புத்தகம் எழுதியுள்ளார். இந்த புத்தகமானது அருந்ததியர் ஒருவர் கோவில் அர்ச்சகராக இருந்து வந்ததும், அதைத் தொடர்ந்து ஊரில் ஏற்படும் நிகழ்வுகளையும் மையப்படுத்தி எழுதப்பட்டது ஆகும்.
இந்த நாவலுக்கு வாஷிங்டனில் உள்ள அமெரிக்கா மேரிலேண்டில் உள்ள உலக தமிழ் பல்கலைக்கழகம் விருது வழங்கியுள்ளது. அரசு அனைத்து சாதியை சேர்ந்த மக்களும் கோவிலில் அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டம் இயற்றியுள்ளது. கள எதார்த்த நிலை வேறு மாதிரியாக உள்ளதை நாவலாக எழுதியுள்ளதாக இவர் கூறியுள்ளார். இந்த நாவலை 8 பேர் தங்களுடைய எம்.பி.எல் பட்டத்திற்காக ஆய்வு செய்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.