சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் என்று மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் உருவான புரெவி புயல் திரிகோணமலை அருகே கரையைக் கடந்தது. அதன்பிறகே தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்த புயல், கன்னியாகுமரி மற்றும் பாம்பன் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புயல் திடீரென பின்வாங்கி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. தற்போது மன்னார் வளைகுடாவில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவிழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது.
இருந்தாலும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் இன்று அதிகாலை முதல் கன மழை பெய்து வரும் நிலையில், என்று 13 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மன்னார் வளைகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழுந்துள்ளது. அதனால் நீர் நிலைகளில் கொள்ளளவு அதிகரித்து வருகிறது.