Categories
அரசியல் மாநில செய்திகள்

60 நாளில் ஆங்கிலம் கற்பது போல… ரஜினியை கேலி செய்த சீமான்…!!!

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது பற்றி சீமான் விமர்சனம் செய்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் பற்றி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “ஜனவரியில் கட்சி துவக்கம். டிசம்பர் 31ம் தேதி அறிவிப்பு. வருகின்ற சட்டசபைத் தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாவது நிச்சயம். அற்புதம்… அதிசயம்… நிகழும்…” என்று தெரிவித்துள்ளார்.

இது பற்றி சீமான் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “60 நாளில் ஆங்கிலம் கற்பது போல ரஜினி கட்சி தொடங்குகிறார். ரஜினிகாந்த் ஒரு அழுத்தம் காரணமாகவே கட்சி தொடங்குகிறார். மேலும் ரஜினி மக்களை அறிவுகெட்ட கூட்டம் என நினைக்கிறார். ரசிகர் மன்றத்தில் இருந்து ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஒருவர் கூடவா இல்லை” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |