நடிகர் சமுத்திரகனி சமூக வலைத்தளத்தில் ‘தலைவி’ திரைப்படத்தில் தனக்கான படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாக பதிவிட்டுள்ளார்.
இயக்குனர் விஜய் இயக்கத்தில் நடிகை கங்கனா ரனாவத் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படமான ‘தலைவி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமி நடித்துள்ளார். இசையமைப்பாளர் ஜிவி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தை திரையரங்கில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.
"தலைவி" திரைப்படத்தில் எனக்கான படப்பிடிப்பு நிறைவடைந்தது…மிக்க மகிழ்ச்சி… பேரன்பான இயக்குனர் ஏ.எல்.விஜய் …செல்வி .கங்கனா ரணாவத் …திரு.அரவிந்த்சாமி மற்றும் என் உடன் நடித்த சக நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள்,உதவி இயக்குனர்கள் அனைவருக்கும் நன்றி..! வெல்வோம்..! pic.twitter.com/wZjegLxvl0
— P.samuthirakani (@thondankani) December 5, 2020
இந்நிலையில் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் சமுத்திர கனி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘தலைவி திரைப்படத்தில் எனக்கான படப்பிடிப்பு நிறைவடைந்தது. மிக்க மகிழ்ச்சி.பேரன்பான இயக்குனர் ஏ.எல்.விஜய், செல்வி. கங்கனா ரனாவத்,திரு.அரவிந்த்சாமி மற்றும் என்னுடன் நடித்த சகநடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், உதவி இயக்குனர்கள் அனைவருக்கும் நன்றி! வெல்வோம்! என பதிவிட்டுள்ளார்.