உணவகங்களில் சாப்பிடும் போது பேசுவதை தவிர்க்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.`
தென்கொரிய ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி உணவகங்களில் உணவு சாப்பிடுபவர்கள் சாப்பிடும்போது குழுவாக உரையாடலை தவிர்ப்பதுடன், உரத்த பேச்சு அல்லது கூச்சல் போடுவதை தவிர்க்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் ஆறு மீட்டருக்கும் அதிகமான தொலைவில் உள்ளவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
6.5 மீட்டர் தொலைவில் உள்ள ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்படக்கூடும் என்றும், பரவும் சாளரம் 5 நிமிடம் வரை இருக்கலாம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. இதை தடுக்க உணவு சாப்பிடும் மேசைகளுக்கு இடையே சுவர்கள் ஏற்படுத்துவதை உணவகங்கள் பரிசீலிக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.