மத்திய பிரதேசத்தில் 9 முதல் 10ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க உள்ளதால் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் பள்ளிக்கு வந்தால் போதும் என்று கூறப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன. மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் மூலம் கல்வி பயின்று வந்தனர். இந்நிலையில் ஒன்பதாம் முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்று அறிவிப்பு வெளியாகியிருந்தது. இதற்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தினால் அந்த முடிவு தள்ளிவைக்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் இறுதியாண்டு தொழில்நுட்ப கல்லூரிகள் மற்றும் மருத்துவ கல்லூரிகள் மற்றும் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலம் ஒன்பதாம் முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் மட்டும் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் பள்ளிக்கு வரும்படி முடிவெடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாரத்தில் எந்தெந்த நாட்கள் வரவேண்டுமென்று தேதிகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இந்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்வு நிச்சயம் நடக்கும் என அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.