Categories
கிரிக்கெட் விளையாட்டு

“சிக்ஸர்களை விளாசி” ஆஸ்திரேலியாவை பாண்டியா பந்தாடிட்டாரு…. இந்திய அணி வெற்றி…!!

இரண்டாவது டி-20 போட்டியில் பாண்டியா விளாசிய சிக்ஸர்களால் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

ஆஸ்திரேலிய அணியின் முதல் டி20 போட்டியில் இந்திய அணியை வெற்றி பெற்றிருந்தது. இதையடுத்து இன்று 2வது டி-20 போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா இந்தியா வெற்றி பெற்ற 195 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. இதைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணிக்கு ஷிகர் தவான், கே.எல்.ராகுல் ஜோடி பவர் பிளே ஓவரில் நல்ல ஆரம்பத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அதன் பிறகு தவானும், கோலியும் அரை சதம் அடித்துள்ளனர்.

இறுதி ஓவரில் இந்திய அணி வெற்றி பெற 14 ரன்கள் தேவை இருந்துள்ளது. இந்நிலையில் முதல் பந்தில் 2 ரன்கள் எடுத்த பாண்டியா 2-வது மற்றும் 4-வது பந்தில் சிக்சர்கள் விளாசி இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்துள்ளார். இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியுள்ளது. இதையடுத்து 3-வது மற்றும் கடைசி டி-20 போட்டி வருகிற டிசம்பர் 8ஆம் தேதி இதே சிட்னி மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

Categories

Tech |