இயக்குனர் மணிரத்னம் இயக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு மீண்டும் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி,மலையாளம் ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. இந்த திரைப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம்ரவி, ஜெயராம், லால், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி உள்ளிட்ட பல நடிகர்கள் நடிகைகள் நடிக்கின்றனர். இயக்குனர் ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.
இந்தப் படத்தில் நடிகை ஐஸ்வர்யாராய் நந்தினி, மந்தாகினிதேவி என இரண்டு கதாபாத்திரங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. நடிகை ஐஸ்வர்ய லட்சுமி பூங்குழலி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு நடந்து வந்தது . இதையடுத்து ஹைதராபாத்திலும் புதுச்சேரியிலும் நடத்தப்பட்டது . அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்க இருந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் தாமதமாக்கப்பட்டது. இந்நிலையில் பொள்ளாச்சியில் வருகிற 10ஆம் தேதி மீண்டும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தொடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது .