Categories
மாநில செய்திகள்

“நியாயமான தீர்ப்பு வழங்கும் வரை போராடுவோம்”… இஸ்லாமியர்கள் போராட்டம்..!!

பாபர் மசூதி விவகாரம் தொடர்பாக நியாயம் கிடைக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்று இஸ்லாமியர்கள் கூறியுள்ளனர்.

56 பாபர் மசூதி இடத்தை முஸ்லிம்களுக்கு திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று இஸ்லாமிய மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இஸ்லாமியர்களுக்கு துரோகம் இளைக்கும் வகையில் ஒருதலைபட்சமாக தீர்ப்பு இருப்பதாகவும், அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பள்ளிவாசலை சட்டவிரோதமான இடித்த குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பள்ளிவாசல் இடிப்பு தினமான இன்று எஸ்டிபிஐ கட்சி சார்பில் பாலக்கரையில் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

இதில் மாவட்ட தலைவர் ஹஸ்ஸான் தலைமையில் 500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். மத்திய அரசை கண்டித்தும் இஸ்லாமியர்கள் வழிபாட்டு தலமான பாபர் மசூதி மீண்டும் அதே இடத்தில் நிறுவ வேண்டும் என்றும, சிறுபான்மை மக்களுக்கு எதிரான தீர்ப்பை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் இந்த விவகாரத்தில் நியாயம் கிடைக்கும் வரை இந்தப் போராட்டம் வருடம் தோறும் தொடரும் என்று எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.

Categories

Tech |