Categories
தேசிய செய்திகள்

தனியாக இருந்த 15 வயது சிறுமி… சாதகமாகிய முதியவர்… பெற்றோரின் அலட்சியத்தால் நேர்ந்த கொடுமை ..!!

மாண்டியா மாவட்டத்தில் 15 வயது சிறுமியை கற்பழித்து கற்பமாகிய முதியவரை போலீசார் கைது செய்தனர்.

மாண்டியா மாவட்டம், காந்திநகர் பகுதியில் வசித்து வருபவர் 61 வயதான வெங்கடேஷ். இவரது பக்கத்து வீட்டில் 15 வயதுடைய ஒரு சிறுமி அவரது பெற்றோர்களுடன் வசித்து வருகிறார். அந்த சிறுமியின் பெற்றோர் காலையில் வேலைக்குச் சென்று மாலை வீடு திரும்புவார்கள். அந்த சிறுமி தனியாக வீட்டில் இருந்து வந்துள்ளார். இதனை சாதகமாக பயன்படுத்திய வெங்கடேஷ் அந்த சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்ற நேரத்தில் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இதுபற்றி வெளியில் கூறினால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

இருப்பினும் அந்த சிறுமி பெற்றோரிடம் இதுகுறித்து கூறியுள்ளார். ஆனால் அந்த சிறுமியின் பெற்றோர் இதை கண்டுகொள்ளவில்லை. இதனை சாதகமாக பயன்படுத்தி வெங்கடேஷ் அந்த பெண்ணை அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதனால் அந்த பெண் கர்ப்பமாகி உள்ளார். இதுபற்றி அந்த பெண் பெற்றோரிடம் கூறவே அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் மாண்டியா மேற்கு போலீசில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த முதியவரை கைது செய்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு மாண்டியா மாவட்டத்தில் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற போது, அந்தப் பெண் தப்பித்து விட்டதால், அந்தப் பெண்ணை கொடூரமாக கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி அப்பகுதியில் ஓடும் கால்வாயில் வீசிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சம்பவம் முடிவதற்குள் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றது மாண்டியா மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |