Categories
அரசியல் மாநில செய்திகள்

எங்களை கண்டு நடுங்கிய புயல்…. யூ-டர்ன் அடித்து சென்றது…. பெருமை கொள்ளும் அதிமுக ….!!

இந்த மாதம் தொடங்குவதற்கு முன்பாகவும்,  சரி தொடங்கிய பிறகும் சரி அடுத்தடுத்து புயல் பற்றிய விவாதம் தமிழகத்தில் பரபரப்பாக போய்க் கொண்டிருக்கின்றது. நிவர் புயல், புரெவி புயல் என அடுத்தடுத்து தமிழகத்துக்கு மழையை கொடுத்து வருகின்றது. புயல் வரும்போது தமிழக அரசு எடுத்த பல்வேறு விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மிகவும் சிறப்பாக இருந்தது, பலரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

இந்த நிலையில்தான் புயல் குறித்தான மீட்பு நடவடிக்கைகளை அதிமுக அரசு கொண்டாட ஆரம்பித்துள்ளது. தமிழக சட்டப்பேரவைக்கு இன்னும் ஐந்து மாதங்களில் தேர்தல் வரவிருக்கும் நிலையில் தமிழக அரசின் செயல்பாடு அதிமுகவுக்கு மிகப்பெரிய வாக்கு வங்கியாக இருக்கும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

இந்த நிலையில்தான் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, தமிழகத்தை தாக்க வந்த புயல் அப்படியே யூ-டர்ன் அடித்து திரும்பி சென்றது. அது தான் அதிமுக ஆட்சி என தெரிவித்தார்.

Categories

Tech |