வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த இரண்டு வயது சிறுவன் கீழே விழுந்ததால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்த தேவாலயம் ஊராட்சி பகுதியை சேர்ந்த விமல் குமார் என்பவரின் மகன் 2 வயது யுவன். இவர் வீட்டில் அருகாமையிலுள்ள குழந்தைகளோடு தனது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது கால் தவறி கீழே விழுந்துள்ளார்.
இதில் சிறுவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கிய உள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனையடுத்து உமராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.