Categories
அரசியல் மாநில செய்திகள்

அடடே…! இது தான் பெயரா ? ஆமாம்..! ஆன்மிக அரசியலை காட்டுது… செமையா இருக்கு

தமிழக அரசியல் களம் பெரும் பரபரப்பை பெற்றுள்ளது. சட்டப்பேரவை தேர்தலுக்கு ஐந்து மாதங்கள் இருக்கும் நிலையில் தற்போது விவாதங்களும்,  பேட்டிகளும்,  அறிக்கைகளும், அறிவிப்புகளும் அரசியல் களத்தை கூர்மைப்படுத்தி கொண்டே இருக்கின்றது.

சில தினங்களுக்கு முன்பு கூட நடிகர் ரஜினிகாந்த் அரசியல் வருகையை உறுதி செய்தார். டிசம்பரில் கட்சி தொடர்பான அறிவிப்பு, ஜனவரியில் கட்சி தொடக்கம் என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டது மட்டுமல்லாமல் செய்தியாளர்களை சந்தித்து கட்சிக்கான ஒருங்கிணைப்பாளர் மற்றும் நிர்வாகிகள் நியமனம் செய்தார்.

1996 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவாரா ? மாட்டாரா ? என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போது ஒரு முடிவு கிடைத்துள்ளது. ரஜினியின் இந்த முடிவு தவமாய் தவம் கிடந்த அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் ஆன்மீக அரசியல் என்ற புதிய பரிணாமத்தை தமிழகத்தில் தொடங்க  இருக்கின்றார். இதனால் நடிகர் ரஜினியின்  அரசியல் கட்சிக்கான பெயர் குறித்த பல்வேறு யூகங்கள் வெளியாகியுள்ளன. ரஜினி தொடங்க உள்ள கட்சியின் பெயர் ஆ.ஜ.க என்று சொல்லப்படுகிறது.

அதாவது ஆன்மீக ஜனதா கட்சி என்ற பெயரில் அரசியல் கட்சி இருக்கும் என  ரஜினி நெருங்கிய வட்டாரங்களும் தெரிவித்து வருகின்றனர். தற்போது ஆ.ஜ.க குறித்து பல விவாதங்கள் ரஜினி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இப்படியான சூழலில் தான் ஜனவரி மாதம் கட்சியின் பெயரை அறிவிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |