பிரபல பாடகரும், நடிகருமான ஒருவர் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ரூ.1 கோடி நன்கொடை அளித்துள்ளார்.
மத்திய அரசு வேளாண் சட்டங்களில் சீர்திருத்தம் செய்து மூன்று சட்டங்களை கொண்டு வந்துள்ளது. அதில் விவசாயிகள் உற்பத்தி வர்த்தகம் மற்றும் வர்த்தக அவசர சட்டம் 2020, விவசாயிகள் ஒப்பந்த சட்டம், அத்தியாவசிய பொருட்கள் அவசர சட்டம் 2020 ஆகிய 3 சட்டங்களையும் கொண்டு வந்துள்ளது. விவசாயிகளுக்கு எதிரான இந்த சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் தொடர் முற்றுகை போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு நடிகர்கள், மாணவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லியில் கடும் குளிரைத் தாங்கிக் கொண்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு குளிரைத் தாங்கும் ஆடைகள் வாங்க ரூபாய் ஒரு கோடி நன்கொடை அளித்துள்ளார் பஞ்சாபின் பிரபல பாடகர்- நடிகர் தில்ஜித் டோசன்ஜ். நேற்று விவசாயிகளுடன் போராட்டத்தில் பங்கேற்ற இவர், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும்படி அரசை வலியுறுத்தியுள்ளார். விவசாயிகளுக்கு 1 கோடி கொடுத்த விஷயத்தை இவர் வெளியிடவில்லை. சக பாடகர் சிங்கா தான் இதை வெளிப்படுத்தியுள்ளார்.