தமிழகத்தில் இன்று முதல் வாரத்திற்கு ஆறு நாட்கள் கல்லூரிகள் செயல்படும் என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் எட்டு மாதங்களுக்குப் பிறகு இன்று கல்லூரிகள் திறக்கப்படுகின்றன. இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நோய்த்தொற்று காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது. மாணவர்கள் ஆன்லைன் மூலம் கல்வி பயின்று வந்தனர். இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் தேர்வு நடத்தப்பட்டு மற்ற ஆண்டுகளில் படிக்கும் மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு கல்வி தொடர அனுமதிக்கப்பட்டது.
நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை இணையவழியில் நடைபெற்றது. ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பம் படிக்கும் முதுகலை இறுதியாண்டு மாணவர்களின் வேலை வாய்ப்பை கருத்தில் கொண்டு இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் கடந்த 2ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்பட்டன. எம்.இ, எம்டெக், எம்.பில், எம்.பி,ஏ, எம்எஸ்சி முதுகலை படிப்புகளில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு டிசம்பர் 7ஆம் தேதி இன்று முதல் கல்லூரிகளை திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. உயர்கல்வி நிறுவனங்கள் பின்பற்றவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசு நேற்று முன்தினம் வெளியிட்டிருந்தது.
உயர்கல்வி நிறுவனங்கள் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். கல்வி வளாகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்த வேண்டும். வெப்பநிலை கருவி, முக கவசம் கட்டாயம் பயன்படுத்த வேண்டும். அருகில் உள்ள சுகாதார மையங்கள், தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து கல்வி நிறுவனங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். பெற்றோர்களுக்கு விருப்பமின்றி மாணவர்களை கல்லூரியில் அனுமதிக்கக் கூடாது.
மாணவர்கள் பகுதி பகுதியாக பிரித்து சுழற்சி முறையில் பாடங்கள் எடுக்கப்படவேண்டும். ஒரு நபர் இடைவெளிவிட்டு வகுப்பறையில் மாணவர்கள் அமர வேண்டும். முககவசம் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும். மாணவர்கள் பேராசிரியர்கள் உடல்நிலை சீரான இடைவெளியில் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும். நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது எனில் அவர் தனிமைப் படுத்தப்பட வேண்டும். நேரடி வகுப்பு இல்லாமல் மாணவர்கள் ஆன்லைனிலேயே பாடம் கற்க விரும்பினால் அவர்களுக்கு தேவையானதை செய்து கொடுக்க வேண்டும்.
விடுதியில் ஓர் அறையில் ஓர் மாணவர்கள் மட்டுமே தங்க அனுமதிக்க வேண்டும். அவர்கள் முடிந்தவரை கல்லூரிக்கு அருகில் உள்ள உறவினர்கள் வீட்டில் தங்கிக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். வாரத்திற்கு 6 நாட்கள் பள்ளிகள் செயல்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி உயர்கல்வி நிறுவனங்கள் இன்று திறக்கப்படுகின்றன.