397 ஆண்டுகளுக்கு பிறகு வானில் இரு கிரகங்கள் இணையும் நிகழ்வு நடைபெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
வானில் வியாழன் மற்றும் சனி கிரகங்கள் அருகருகே வரும் அரிய காட்சியானது 397 வருடங்களுக்கு பிறகு, இந்த வருடம் வரும் 21ஆம் தேதி நடக்க உள்ளது. இது தொடர்பாக எம்.பி பிர்லா கோளரங்கத்தின் இயக்குனர் பிரசாத்துரை வெளியிட்ட அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய கிரகங்களான வியாழன் மற்றும் சனி கடைசியாக 1623 ஆம் வருடம் அருகருகே தோன்றின. அதன் பின்னர் இந்த இரு கரங்களும் தற்போது மிக நெருக்கமாக வருகிற 21-ஆம் தேதி நடக்க உள்ளது.
அப்போது இந்த இரண்டு கிரகங்களும் சிறிய நட்சத்திரங்களைப் போல் காணப்படும். இது கிரகங்களின் மிகப்பெரிய இணைப்பு என்று கூறப்படுகிறது” என்று கூறியுள்ளார். இதையடுத்து இந்த அரிய நிகழ்வு வரும் 2080ஆம் வருடம் மார்ச் 15ம் தேதி தோன்ற உள்ளன. வரும் 21ம் தேதியன்று நடக்கும் இந்த நிகழ்வை நாட்டின் பல முக்கிய நகரங்களில் மாலை சூரிய அஸ்தமனத்திற்கு பின்னர் பார்க்கலாம்.