Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு 1 கோடி… நன்கொடை வழங்கிய நடிகர்… Awesome…!!!

டெல்லியில் கடும் குளிரில் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு பஞ்சாப்பின் பிரபல நடிகர் ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார்.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் ஒன்று திரண்டு இரவு பகல் பாராமல் நடு நடுங்கும் குளிரில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது ஆதரவை செலுத்தி வருகிறார்கள்.

இதனையடுத்து விவசாயிகளுடன் மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகளை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் இந்த போராட்டம் கட்டாயம் தொடரும் என விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நாளை பாரத் பந்த் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் டெல்லியில் கடும் குளிரைத் தாங்கிக் கொண்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு குளிரை தாங்கும் ஆடைகள் வாங்க ஒரு கோடி ரூபாய் நன்கொடை அளிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப்பின் பிரபல பாடகர் மற்றும் நடிகரான தில்ஜித் டோசன்ஜ் நேற்று விவசாயிகளுடன் போராட்டத்தில் பங்கேற்று கொண்டார். அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும்படி அரசை வலியுறுத்தியுள்ளார். மேலும் ஒரு கோடி ரூபாய் கொடுத்த விஷயத்தை இவர் வெளியிடவில்லை. சக பாடகர் சிங்கா தான் இதை வெளிப்படுத்தியுள்ளார். இந்த ஒரு கோடி ரூபாய் விவசாயிகளுக்கு கட்டாயம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |