உலகத்திலேயே அரியவகை குரங்கான மார்மோசெட் என்னும் குரங்கு இங்கிலாந்து நாட்டின் செமஸ்டர் உயிரியல் பூங்காவில் உள்ளது.
உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் பல்வேறு வகையான குரங்குகள் உள்ளன. அவைகள் அனைத்தும் காடுகளில் மற்றும் உயிரியல் பூங்காக்கள் போன்றவற்றில் வளர்ந்து வருகின்றன. இதனையடுத்து இங்கிலாந்து நாட்டில் செமஸ்டர் என்ற உயிரியல் பூங்கா உள்ளது. அங்கு ஏராளமான விலங்குகள் உள்ளன. அங்குள்ள ஒவ்வொரு விலங்குகளும் புதிய தோற்றத்தில் மக்களை கவரும் வகையில் இருக்கும்.
அதன்படி உலகத்திலேயே சிறிய வகை குரங்கான மார்மோசெட் எனப்படும் அரிய வகை குக்குரங்குகள் பிறந்துள்ளன. அவை ஐந்து சென்டிமீட்டர் நீளம் மற்றும் 10 கிராம் எடையில் இந்த குரங்குகள் பிறந்துள்ளன. விரல் அளவு மட்டுமே உள்ள இந்த அரிய வகை அதிசய குரங்கை காண பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.