Categories
மாநில செய்திகள்

“தமிழகத்தில் அடுத்ததாக” களமிறங்கும் புயலுக்கு…. என்ன பெயர் தெரியுமா…??

அடுத்ததாக தமிழகத்தில் உருவாக இருக்கும் புயலுக்கு வைக்கப்பட்டுள்ள பெயர் தற்போது வெளியாகியுள்ளது. 

தமிழகத்தில் தொடர்ச்சியாக, சென்ற மாதத்திலிருந்து இந்த மாதம் வரை நிவர், புரெவி என்று அடுத்தடுத்து புயல்கள் உருவாகி தமிழகத்தின் தென் மாவட்டங்களை புரட்டி போட்டு வருகின்றது. ஆனால் அதிக அளவு மழையை கொடுத்துள்ளதால், மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 48 மணி நேரம் நகராமல் ஒரே இடத்தில் இருந்து ஆட்டம் காட்டிய புரெவி தற்போது கரையை கடந்து சென்றுள்ளது. இதையடுத்து தற்போது இந்து மகா சமுத்திரம் பகுதியை, குறிப்பாக தமிழக பகுதியைத் தாக்க இருப்பதாக கணிக்கப்படும் அந்த புயலின் பெயர் “அர்னாப்” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த புயலுக்கு வைக்கப்பட்டிருக்கும் பெயருக்கும், வலதுசாரி மீடியா பிரபலமான அர்னாப் கோஸ்வாமிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது வேறு விஷயம். இந்த பெயரை தேர்வு செய்தவர்கள் வங்க தேசத்தைச் சேர்ந்தவர்கள். மியான்மர், ஓமன் பாகிஸ்தான், கத்தார் மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட 13 நாடுகளிலிருந்து மொத்தம் 269 பெயர்கள் இந்த புயலுக்கு பரிந்துரைக்கப்பட்டன. அவற்றிலிருந்து ஒன்று தேர்வு செய்யப்பட்டது தான் இந்த பெயர். இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் புயலுக்கான புதிய பெயர்களான ஃபனி, வாயு, புல்புல் மற்றும் ஹிக்கா போன்றவற்றை தனது பாட்டிலிருந்து வெளியிட்டுள்ளது.

Categories

Tech |