Categories
மாநில செய்திகள்

பாலியல் தொல்லை… காவலருக்கு மண்டை உடைப்பு… சென்னையில் பரபரப்பு…!!!

சென்னையில் பேருந்துக்காக நின்று கொண்டிருந்த பெண்ணிடம் காவலர் பாலியல் தொல்லை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மக்களை அச்சுறுத்த கூடிய பல்வேறு சம்பவங்கள் நடந்து வருகின்றன. அதனால் மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர். மேலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற எண்ணம் மக்கள் மனதில் எழுந்துள்ளது. இந்நிலையில் சென்னை வடபழனியில் இன்று காலை பேருந்துக்காக பெண் ஒருவர் காத்திருந்துள்ளார். அப்போது அங்கிருந்த காவலர் ஒருவர் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

அதனைக் கண்ட அப்பகுதி மக்கள் காவலருக்கு தர்ம அடி கொடுத்தனர். அதனால் காவலரின் மண்டை உடைந்தது. அவர் பணி முடிந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, மதுபோதையில் அந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்துள்ளார். இதனையடுத்து காவலரை பணிநீக்கம் செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |