சென்னை தி நகர் அபிபுல்லா சாலையில் இயங்கி வரும் நடிகர் சங்க அலுவலக கட்டடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு.
தென்னிந்திய நடிகர் சங்க அலுவலகம் சென்னை தி நகர் அபிபுல்லா சாலையில் இயங்கி வருகிறது. இந்நிலையில் இன்று காலை அலுவலக கட்டடத்தில் திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர் .
இந்த விபத்தில் அலுவலகத்துக்குள் இருந்த முக்கிய ஆவணங்கள் மற்றும் கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருள்கள் எரிந்து நாசமாகிவிட்டதாக தெரிகிறது. மேலும் இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர் .