கத்தரிக்காய் புளிக்கூட்டு செய்ய தேவையான பொருள்கள்:
கத்தரிக்காய் – 4
கடலைப்பருப்பு – அரை கப்
கடுகு – 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 4
பெருங்காயத்தூள் – சிறிதளவு
மஞ்சள்தூள் – சிறிதளவு
தேங்காய்த்துருவல் – பாதி மூடி
செய்முறை:
முதலில் அடுப்பில் குக்கரை வைத்து, அதில் கடலைப்பருப்பை போட்டு, தண்ணீர் ஊற்றி முடி வைத்து, நன்கு வேக விட்டு 1 விசில் வந்ததும் இறக்கி விடவும். பின்பு பாத்திரத்தில் புளியை எடுத்து தண்ணீர் ஊற்றி நன்கு கரைத்து கொள்ளவும்.
அதன் பின்பு கத்திரிக்காயை எடுத்து நீள துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும். அதனை அடுத்து தேங்காயை எடுத்து நன்கு துருவி எடுத்து கொள்ளவும்.
பிறகு அடுப்பில் கடாயை வைத்து அதில் கரைத்த புளி தண்ணிரை ஊற்றி, கத்தரிக்காய்த் துண்டுகளை போட்டு நன்கு வேக வைக்கவும்.
பின்னர் அடுப்பில் வாணலியை வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உளுத்தம்பருப்பு, மிளகாய் போட்டு நன்கு வறுத்து, அதனுடன் தேங்காய்த்துருலைபோட்டு வதக்கவும்.
மேலும் அதனுடன் பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் போட்டு நன்கு கிளறி கொதிக்க வைத்த கத்தரிக்காயை புளியை சேர்த்து, நன்கு கொதிக்கவிட்டு சிறிது கிளறி இறக்கி பரிமாறினால் சுவையான கத்தரிக்காய் புளிக்கூட்டு ரெடி.