தமிழகம் முழுவதிலும் ஜாதிவாரி புள்ளி விவரங்களை சேகரித்து உடனடியாக அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதன்படி ஜாதிவாரி புள்ளி விவரங்களை உடனடியாக சேகரிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
தற்போது ஜாதிவாரி புள்ளி விவரங்களை சேகரிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி குணசேகரன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் குலசேகரன் தலைமையிலான ஆணையம் உடனே செயல்பாட்டுக்கு வருவதோடு மட்டுமல்லாமல் விரைவில் புள்ளி விவரங்களை திரட்டி அரசுக்கு அறிக்கை அளிக்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சமூக நீதியை நிலைநாட்ட அனைத்து நடவடிக்கைகளையும் அரசு தொடர்ந்து மேற்கொள்ளும் எனவும் அறிவித்துள்ளார்.