சில்லி பரோட்டா செய்ய தேவையான பொருட்கள் :
பரோட்டா உதிர்த்தது – 2 (பெரியது)
வெங்காயம் பெரியது – 1
தக்காளி பெரியது – 1
பச்சை மிள்காய் – 1
குடமிளகாய் – பாதியளவு
டொமட்டோ சாஸ் – 2 ஸ்பூன்
அஜினமோட்டோ – ஒரு சிட்டிகை
சில்லி பவுடர் – கால் டீஸ்பூன்
கரம் மசாலா பவுடர் – கால் டீஸ்பூன்
எலுமிச்சை ஜூஸ் – 2 டீஸ்பூன்
எண்ணெய் – 4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
ஸ்பிரிங் ஆனியன் – சிறிது
கொத்தமல்லி தழை – சிறிது
செய்முறை :
முதலில் பாத்திரத்தில் பெரிய பரோட்டாகளை எடுத்து உதிரியாக உதிர்த்து கொள்ளவும். பின்பு வெங்காயம், குடமிளகாய், தக்காளியை நீளவாக்கி வெட்டி எடுத்து கொள்ளவும்
பிறகு ஸ்பிரிங் ஆனியன், கொத்தமல்லி தழை, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். மேலும் அடுப்பில் கடாயை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
பின்பு நன்கு வதங்கிய வெங்காயத்துடன், நறுக்கிய பச்சை மிளகாய், தக்காளி, டொமட்டோ சாஸ், குடமிளகாய், தேவையான அளவு உப்பு, சேர்த்தபின், தேவைப்படால் அஜினமோட்டோ சேர்த்து நன்கு வதக்கி ஆப்பையால் நன்கு மசித்து கொள்ளவும்.
பின்னர் அதனுடன் கரம் மசாலாபவுடர், சில்லி பவுடர் சேர்த்து நன்கு கிளறியபின், உதிர்த்து வைத்த பரோட்டாவை சேர்த்து நன்றாக கிளறி விடவும்.
மேலும் அதில் புளிப்பு தேவைபட்டால் எலுமிச்சை ஜூஸ் சேர்த்து வேகும் வரை வதக்கவும். இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி தழை, ஸ்பிரிங் ஆனியன்களை தூவி அலங்கரித்து பரிமாறினால், ருசியான சில்லி பரோட்டா ரெடி.