Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

அதிக சத்து நிறைந்த… இந்த வாழைக்காய் கூட்டை… செய்து கொடுத்து அசத்துங்க..!!

வாழைக்காய் கூட்டு செய்ய தேவையான பொருள்கள் :

வாழைக்காய்                     – 1
மஞ்சள் தூள்                       – 1/4 தேக்கரண்டி
பச்சைப்பயறு                     – 1 கப்
பச்சை மிளகாய்                – 6
தேங்காய்த்துருவல்        – 2 தேக்கரண்டி
சீரகம்                                      – 1 தேக்கரண்டி
உப்பு                                         – 1 தேக்கரண்டி
எண்ணை                               – 1 தேக்கரண்டி
கடுகு                                        – 1/2 தேக்கரண்டி
பெருங்காய்த்தூள்             – ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை                    – 1 கீற்று

செய்முறை:

முதலில் பாத்திரத்தில் பச்சைப் பயிறை எடுத்து, அதில் தண்ணீர் ஊற்றி  8 மணி நேரம் நன்கு ஊற வைத்து எடுத்து  கொள்ளவும். பிறகு தேங்காயை எடுத்து துருவி எடுத்துக் கொள்ளவும்.

பின்பு வாழைக்காயை எடுத்து தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். தேங்காய்த்துருவல், பச்சைமிளகாய், சீரகம் ஆகியவற்றை மிருதுவாக அரைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் குக்கரை  வைத்து, அதில் ஊற வைத்த பச்சை பயிறை போட்டு, மூழ்கும் வரை தண்ணீர்  ஊற்றி, அதில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 2 விசில் வரும் வரை நன்கு வேக விடவும்.

கடாயை அடுப்பில் வைத்து, அதில் வாழைக்காய் துண்டுகளை போட்டு, மூழ்கும் வரை தண்ணீரை ஊற்றி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்து, மீதமுள்ள தண்ணீரை வடிகட்டி கொள்ளவும்.

அடுப்பில் வாணலியில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, பெருங்காய்த்தூள், கறிவேப்பிலைச் சேர்த்து தாளித்து, அதில்  வேக வைத்துள்ள வாழைக்காய், பயறு, சிறிது உப்பு,  அரைத்த தேங்காய் விழுதை சேர்த்துக் கொள்ளவும்,

பின்பு அதனுடன் சிறிது தண்ணீரை ஊற்றி கிளறி விட்டு, ஒரு கொதி கொதித்ததும், இறக்கி பரிமாறினால் ருசியான  வாழைக்காய் கூட்டு தயார்….!

Categories

Tech |