Categories
மாநில செய்திகள்

இவர்களுக்கு மட்டும் அனுமதி… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழக மீனவர்கள் 17 நாட்களுக்குப் பிறகு மீன்பிடிக்க அனுமதி பெற்று கடலுக்கு செல்வதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வங்க கடலில் உருவான புரெவி புயல் திரிகோணமலை அருகே கரையைக் கடந்தது. அதன்பிறகே தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்த புயல், கன்னியாகுமரி மற்றும் பாம்பன் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புயல் திடீரென பின்வாங்கி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. வங்கக் கடலில் ராமேஸ்வரம் அருகே நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி உள்ளது. அதனால் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

மேலும் புயல் மற்றும் கனமழை காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வேதாரண்யம், கோடியக்கரை, புஷ்பவனம் உள்ளிட்ட 15 கிராம் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடல் சீற்றத்தால் கடந்த 17 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் இருந்த நிலையில், மீன்பிடிக்க மீன்வளத் துறை அனுமதி அளித்துள்ளது. அதனைப்போலவே புயல் எச்சரிக்கை முடிந்த நிலையில், ஏழு நாட்களுக்குப் பிறகு நெல்லை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு சென்றனர். இந்த அறிவிப்பால் மீனவர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |