Categories
சென்னை மாவட்ட செய்திகள்

போதையில் அடாவடி… போலீசாரை ஆபாசமாக திட்டிய இளம்பெண்… வைரலாகும் வீடியோ..!!

சென்னையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது குடிபோதையில் காரில் வந்த பெண்ணொருவர் காவல்துறையினரை ஆபாசமாக திட்டிய வீடியோ வைரலாகி வருகிறது.

சென்னையில் சனிக்கிழமை இரவு போக்குவரத்து காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருவான்மியூர் பகுதியில் சில இளைஞர்கள் குடித்துவிட்டு கார் ஓட்டி வந்து உள்ளனர். அவர்களை சோதனையிட்ட முற்பட்ட போது காரில் இருந்த இளம்பெண் ஒருவர் போலீசிடம் வாக்குவாதம் செய்துள்ளார். நான் யார் தெரியுமா? என் அப்பா யார் தெரியுமா? என்று காவலரை தகாத வார்த்தையால் பேசி திட்டியுள்ளார்.

இந்த சம்பவம் அனைத்து காவல் துறையின் கை கேமரா மற்றும் சட்டையில் பொருத்தப்பட்டிருந்த பாடி ஒன் கேமராவில் பதிவாகியுள்ளது. தொடர்ந்து இப்பெண்ணின் காரை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். போலீஸ் விசாரணையில் இப்பெண் அடையாறில் வசித்து வரும் காமினி என்றும், சினிமாவில் உதவி இயக்குனராக பணிபுரிந்து வருகிறார் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து அந்த பெண்ணை கைது செய்த போலீசார் ஆபாசமாக பேசுதல், பொதுப் பணியாளர் பணி செய்ய விடாமல் இடையூறு செய்தல் போன்றவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்து உள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |