Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வீடியோ: “நண்பருடன் போதையில்” நான் யார் தெரியுமா…? மிரட்டிய இளம்பெண்…!!

போதையில் வந்த பெண் காவல்துறையினரை ஆபாசமாக திட்டிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது.

சென்னையில் திருவான்மியூர் பேருந்து நிலையத்தின் பின்புறம் உள்ள அவென்யூ சாலையில், காவல்துறையினர் வேகமாக சென்ற கார் ஒன்றை நிறுத்தி உள்ளனர். அப்போது அந்த காரில் ஆண் நண்பருடன் கார் ஓட்டி சென்ற இளம் பெண் மது அருந்தியுள்ளாரா? என்று சோதனையிட்டுள்ளனர். அப்போது காரில் இருந்து கீழே இறங்கிய அந்த பெண் தடாலடியாக காவல்துறையினரிடம் பேசியதுடன், அவர்களை உதைக்க சென்றுள்ளார்.

மேலும் ஆபாச வார்த்தைகளால் காவல்துறையினர் திட்டியதோடு, நான் யார் தெரியுமா? நான் மீடியாவில் இருக்கிறேன் என்று மிரட்டியுள்ளார். இருப்பினும் காவல்துறையினர் நீண்ட நேரமாக அந்த பெண்ணின் அடாவடியை சகித்து கொண்டுள்ளனர். பின்னர் காவல்துறையினரே அந்த பெண்ணிடம், “போலீசார் சோதனை கொஞ்சம் ஒத்துழையுங்கள் மேடம்” என்று மரியாதையாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் தற்போது வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது

Categories

Tech |