பிக்பாஸ் பிரபலம் சம்யுக்தாவுக்கு நடிகர் விஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
மாடலிங் துறையில் சிறந்து விளங்கிய சம்யுக்தா நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 4-வது சீசனில் கலந்துகொண்டு பிரபலமடைந்தார் . சில தினங்களுக்கு முன் மக்களின் குறைவான வாக்குகளை பெற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சம்யுக்தா தற்போது விஜய் சேதுபதி நடிக்கும் ‘துக்ளக் தர்பார்’ படத்தில் நடித்துள்ளார் .
இந்த படத்தை புதுமுக இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்குகிறார் . மேலும் இந்த படத்தில் ராஷிகண்ணா, மஞ்சிமா மோகன்,பார்த்திபன், கருணாகரன், ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் பிக்பாஸில் இருந்து வெளியேறிய ஒரு சில நாட்களிலேயே படத்தில் நடிக்க வாய்ப்பு வந்த சம்யுக்தாவுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவிதுள்ளனர்.