டி-20 போட்டியில் அடிக்கும் ஒவ்வொரு பவுண்டரிக்கும் ஒரு கிஸ் என்று பெண் ஒருவர் காட்டிய பதாகை பரபரப்பை கிளப்பியுள்ளது.
இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான டி20 போட்டிக்கு நடுவே பெண் ஒருவர். இந்த போட்டியில் எட்டாவது ஓவரில் இந்தியாவை சேர்ந்த ரசிகை ஒருவர், ஒவ்வொரு பவுண்டரிக்கும் என் காதலருக்கு ஒரு கிஸ் கொடுப்பேன் என்று பதாகை எழுதி காண்பித்த புகைப்படம் தொலைக்காட்சியில் காட்டப்பட்டது. இதையடுத்து இந்த புகைப்படம் இணையதளத்தில் வெளியானது. இதை பார்த்த முரட்டு சிங்கிள்ஸ் பலரும் கண்ணீர் விட்டது தனிக்கதை.
இந்த அறிவிப்பை மைதானத்தில் இருந்த பலரும் அதை ரசிக்கத் தொடங்கினர். இப்படி ஒரு வித்தியாசமான அறிவிப்பா? என்று பலரும் இதை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். இந்த புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவியதால் மொத்தம் எத்தனை பவுண்டரி என்று சிங்கிள்ஸ் கணக்கு போட்டுள்ளனர். அதில், ஆஸ்திரேலிய அணி 15 four, 7 six அடித்திருந்தது. இந்திய அணி 13 four, 9 six மஅடித்திருந்தது.
2வது டி20 போட்டியில் மொத்தம் 44 பவுண்டரிகள் அடிக்கப்பட்டதை கணக்கு போட்ட ரசிகர்கள், அந்த பெண் ஒரே பிசி தான் என நக்கல் செய்யத் தொடங்கியுள்ளனர். மேலும் சிலர் யார் அந்த பெண்? அந்த காதலன் கொடுத்து வைத்தவர் என்று பொறாமையோடும் வெந்து வருகின்றனர். இது போன்ற விஷயங்களை செய்வதால் வைரலாகி வருவது தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது.