பிஸ்கட் லட்டு செய்ய தேவையான பொருட்கள்:
பிஸ்கட் – 1 பாக்கெட்
கன்டென்ஸ்ட் மில்க் – அரைக் கப்
கோக்கோ பவுடர் – 4 தேக்கரண்டி
பால் – 2 தேக்கரண்டி
உலர் பழங்கள் – தேவைக்கு
அழங்கரிக்க:
ரெயின்போ ஸ்ப்ரே – 1 தேக்கரண்டி
சாக்லேட் – அரை கிண்ணம்
தேங்காய் பவுடர் – 4 தேக்கரண்டி
செய்முறை:
முதலில் பாத்திரத்தில் சாக்லேட்டை துருவி எடுத்துக் கொள்ளவும். பின்பு உலர் பழங்களை எடுத்து பொடிப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பிறகு பிஸ்கட்டை எடுத்து மிக்சிஜாரில் போட்டு நன்கு அரைத்து தூளாக்கிக் கொள்ளவும். மற்றோரு பாத்திரத்தில் கன்டெஸ்ட் மில்க், பால், கொக்கோ தூள் சேர்த்து நன்கு கலக்கி, கெட்டியாக பிசைந்து கொள்ளவும்
மேலும் அதனுடன் பிஸ்கட் தூள், பொடியாக நறுக்கியுள்ள உலர் பழங்களைச் சேர்த்து கெட்டியாக லட்டு மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். பின்பு உள்ளங்கைகளில் சிறிதளவு நெய்யை எடுத்து நன்கு தடவியபின், பிசைந்த மாவுக் கலவையை சிறு உருண்டைகளாக, லட்டு வடிவத்தில் பிடித்து வைக்கவும்.
இறுதியில் உருண்டையாக பிடித்த லட்டுவின் மேல், துருவிய சாக்லேட், தேங்காய் பவுடரை தூவி அலங்கரித்து எடுத்து குளிர்சாதன பெட்டியில் குளிர வைத்து, அரை மணி நேரம் கழித்து, எடுத்து பரிமாறினால் ருசியான பிஸ்கட் லட்டு ரெடி.