இறால் புலாவ் செய்ய தேவையான பொருட்கள் :
இறால் – 250 கிராம்
அரிசி – 1 கப்
வெண்ணெய் – 3 டீஸ்பூன்
சீரகம் – அரை ஸ்பூன்
கிராம்பு – 4
இலவங்கப்பட்டை – 3
ஏலக்காய் – 2
பிரியாணி இலை – 1
இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
வெங்காயம் – 1
தக்காளி – 1
பச்சை மிளகாய் – 2
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
தேங்காய்ப்பால் – 1 கப்
உப்பு – சுவைக்கேற்ப
எண்ணெய் – தேவைக்கு
கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை :
முதலில் வெங்காயம், கொத்தமல்லித் தழை, தக்காளி, பச்சை மிளகாயை எடுத்து பொடியாக நறுக்கி கொள்ளவும். மேலும் இஞ்சியை துண்டுகளாக நறுக்கியதும், அதனுடன் பூண்டையும் போட்டு மிக்சிஜாரில் நன்கு அரைத்து எடுத்து கொள்ளவும்.
பின்பு பாத்திரத்தில் இறாலை எடுத்து நன்கு சுத்தம் செய்தப் பின், அதில் மஞ்சள்தூள், மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து, அரை மணி நேரம் நன்கு ஊற வைத்து கொள்ளவும். பின்னர் மற்றோரு பாத்திரத்தில் அரிசியை எடுத்து நன்கு கழுவி, தண்ணீரை வடித்து எடுத்து கொள்ளவும்.
அதனை அடுத்து அடுப்பில் வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கலந்து வைத்த இறாலை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். அதன் பின்பு தேங்காயை எடுத்து, துண்டுகளாக நறுக்கி, மிக்சிஜாரில் போட்டு நன்கு அரைத்தும், அதன் பாலை மட்டும் எடுத்து கொள்ளவும்.
மேலும் அடுப்பில் கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், கிராம்பு, இலவங்கப்பட்டை, ஏலக்காய், பிரியாணி இலையை சேர்த்து தாளித்தும், பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
பின்பு அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போகும் வரை, நன்கு வதக்கிய பின் நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து, நன்கு வதக்கி கொள்ளவும். பிறகு அதனுடன் வடிகட்டி வைத்த அரிசியை சேர்த்து நன்கு கிளறி விடவும்.
பின்னர் அதில் சிறிதளவு தண்ணீர், தேங்காய்ப்பால், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து மூடி வைத்து புலாவை நன்கு வேக வைத்து கொள்ளவும். மேலும் புலாவானது நன்கு வெந்ததும், அதில் வறுத்த இறாலை வைத்து, கொத்தமல்லி இலையை தூவி, பரிமாறினால் சுவையான இறால் புலாவ் தயார்.