1939ஆம் ஆண்டில் லீனா மதினா என்ற இளம்பெண் தாய் ஆன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைப்பற்றி விரிவாக காணலாம்.
1939 ஆண்டு பெரு கிராமத்தில் ஐந்து வயது மகளின் வயிறு விரிவடைவதை கண்ட பெற்றோர் வயிற்றில் ஏதாவது கட்டி இருக்கும் என்று எண்ணி மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர், ஆனால் அங்கு நடந்ததோ வேறு அவர் மருத்துவர்கள் லீனா மதினாவை பரிசோதித்துப் பார்த்துவிட்டு அவர் ஏழுமாத கர்ப்பமாக இருக்கிறார் என்று கூறியதால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 6 வாரங்களுக்குப் பிறகு மதினாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை சிசேரியன் செய்யப்பட்டு 2.7 கிலோ எடையுடன் ஆரோக்கியமாக பிறந்தது. தனக்கு சிசேரியன் செய்த மருத்துவரின் பெயரான ஜெரார்டோ என்ற பெயரை தனது மகனுக்கு சூட்டியுள்ளார்.
இளம் வயதில் கர்ப்பம்
இளம் வயதில் கர்ப்பமாகி தாயான லீனா வாழ்க்கை தொடர்ந்து மர்மம் மட்டுமே நீடித்து வருகிறது. அந்த குழந்தையின் தந்தை யார்? எவ்வாறு கர்ப்பம் ஆனால் என்ற மர்ம முடிச்சுகள் இதுவரை அவிழ்க்கப் படவில்லை. செப்டம்பர் 23, 1933 அன்று பெருவில் உள்ள ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த லீனா மதினா உடன் ஒன்பது குழந்தைகள் பிறந்துள்ளன. அவர் இளம் வயது கர்ப்பம் மற்றும் தாயான சம்பவம் கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மருத்துவக் காரணம்
முன்கூட்டியே பருவமடைதல் என்பது ஒரு அரிய பருவமாற்ற நிலை. இது பொதுவாக 10 ஆயிரம் குழந்தைகளில் ஒருவருக்கு மட்டும் ஏற்படும் மாற்றம். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் முன்கூட்டியே பருவமடைதல். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், முன்கூட்டிய பருவமடைதலுக்கான காரணத்தை அடையாளம் காண முடியாது.
இருப்பினும் சமீபத்திய ஆய்வு மூலம் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு வரும் சிறுமிகள் விரைவில் பருவமடைந்து விடுகின்றன. இதனால் லீனாவும் முன்கூட்டியே பருவம் அடைந்து இருக்கலாம் என்று டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். லீனா தனது முதல் மாதவிடாயை ஐந்து வயதில் எட்டி இருக்கக்கூடும் என்று கூறுகின்றனர்.
மேலும் லீனா மதினாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது மார்பகங்கள் மற்றும் இடுப்பு அளவு சாதாரண ஐந்து வயது குழந்தைகளுக்கு இருப்பதை காட்டிலும் சற்று அதிகமாகவே வளர்ச்சி அடைந்து இருப்பதாக அவர்கள் கூறினர். லீனா கர்ப்பமாக இருந்த நேரத்தில் அவர் ஐந்தாவது பிறந்தநாளை இருந்திருக்கக் கூடும். அதே சமயத்தில் அவரது உடல் மிகவும் சிறிய மற்றும் முதிர்ச்சியற்ற பெண்ணின் உடல் வாகாக இருந்திருக்கவேண்டும்.
முன்கூட்டியே பருவமடைதல்
முன்கூட்டியே பருவமடைதல் என்பது லீனா மதினாவின் கர்ப்பத்திற்கு ஒரு முக்கிய காரணம் என்றும் கூறலாம். குழந்தையை பெற்ற அழகான குழந்தை, எல்லாவற்றிற்கும் மேலாக அவள் தாயான சமயத்தில் சிறு குழந்தையாக இருந்துள்ளார். எனவே அவரை யார் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார்கள் என்பதை குறித்து தெரியவில்லை. அவரிடம் கேட்டபோது தனக்கு முழுமையாக தெரியவில்லை என்று கூறினார்.
தந்தை கைது
இந்நிலையில் சந்தேகத்தின் அடிப்படையில் அவரது தந்தை திரிபுராலோ முதலில் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் அவருக்கு எதிராக எந்த சாட்சியும் கிடைக்காத காரணத்தினால் அவர் வெளியில் வந்தார். பின்னர் அவரிடம் பத்திரிகையாளர்கள் ஒரு நேர்காணல் செய்தனர். அதில் லீனா மதினா மற்றும் அவரது குடும்பத்தினர் இந்த குற்றத்தை முற்றிலும் மறுத்து விட்டனர்.
மதினாவின் திருமணம் மற்றும் மகன் மரணம்
1970 ஆம் ஆண்டு ரவுல் ஜுராடோ என்ற நபரை லினா மதினா மணந்தார். தனது 39 வயதில் இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்தார். முதல் குழந்தையான ஜெரார்டோ 1979ஆம் ஆண்டு எலும்பு நோயால் தனது 40 வயதில் காலமாகியுள்ளார்.