அடுத்தடுத்து 5 புயல்கள் தமிழகத்தை தாக்க உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நிவர் மற்றும் புரெவி அடுத்தடுத்து வந்து புரட்டிப்போட்டு விட்டு சென்றுவிட்டன. ஆனால் என்னவே இந்த புயலால் தமிழகத்திற்கு நல்ல மழை கிடைத்துள்ளது. இந்நிலையில் இந்த 2 புயலை அடுத்து புதிய புயல் வர இருப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து தமிழகத்தில் அடுத்தடுத்து ஐந்து புயல் உருவாக்க உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நாளை புயல் வரலாம் என்றும், அந்த புயலுக்கு “Tauktao” என்றும் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வரும் 17ஆம் தேதி உருவாகும் புயலுக்கு “Yass” என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் டிசம்பர் 24ஆம் வருகின்ற புயலுக்கு “குலாப்” என்ற பெயரும் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல வரும் வருடம் 2021 ஆம் வருடம் ஜனவரி 1-ஆம் தேதி ஒரு புயல் வரலாம் என்றும் அதற்கு “Shaheen” என்றும் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அடுத்த வருடம் ஜனவரி 8ஆம் தேதி “Jawad” என்று ஒரு புயல் வரலாம் என்றும் சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இப்படி அடுத்தடுத்து புயல் தொடர்ந்து வரும் என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்ததால் மக்கள் தங்களுடைய இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டு விடுமோ என்று பெரும் அச்சத்திலும், பீதியிலும் உள்ளனர்.