நடிகர் கமல்ஹாசன் நடிக்கவுள்ள ‘விக்ரம்’ திரைப்படத்தில் வில்லனாக பிரபல மலையாள நடிகர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ‘விஸ்வரூபம் 2’ . இதன் பின் இயக்குனர் ஷங்கரின் ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் நடித்து வந்தார். ஆனால் தற்போது இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. இதையடுத்து நடிகர் கமல் நடிப்பில் தயாராகவுள்ள திரைப்படம் ‘விக்ரம்’. இந்தப் படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார் .
நடிகர் கமல்ஹாசன் பிறந்த நாளன்று இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த திரைப்படம் குறித்த சூப்பர் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது விக்ரம் திரைப் படத்தில் கமலுக்கு வில்லனாக பிரபல மலையாள முன்னணி கதாநாயகன் ஃபகத் பாசில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.