கோவிட் மைய வளாகத்திலேயே வைத்து ஒரு தம்பதி திருமணம் செய்துள்ள சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ராஜஸ்தான் மாநிலம், பாரான் மாவட்டத்தில் உள்ள கெல்வாரா எனும் கொரோனா மைய வளாகத்தில் ஒரு திருமண தம்பதி PPE கிட் உடையிலேயே தங்களது திருமணத்தை முடித்துள்ளனர். மணப்பெண்ணுக்கு கோவிட் தொற்று பாசிட்டிவாக இருந்ததால் PPE கிட்அணிந்து திருமணம் நடந்துள்ளது. இந்த திருமணத்திற்கு மணமக்கள், அய்யர் மற்றும் ஒரு நபர் மட்டுமே கலந்துகொண்டதாக கூறப்படுகிறது.
இவர்களின் இந்த வினோதமான திருமண வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த திருமணம் கொரோனா வழிமுறைகள் அனைத்தையும் பின்பற்றியே நடந்துள்ளது. மணமக்கள் குண்டத்தின் முன்னே அமர்ந்திருக்க அய்யர் மந்திரம் ஓத, திருமண சடங்குகள் செய்து திருமணத்தை நடத்தி வைக்கப்பட்டது. குறிப்பாக திருமணத்தை நடத்தி வைத்த ஐயரும் PPE கிட் உடையில் தான் வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
#WATCH Rajasthan: A couple gets married at Kelwara Covid Centre in Bara, Shahbad wearing PPE kits as bride's #COVID19 report came positive on the wedding day.
The marriage ceremony was conducted following the govt's Covid protocols. pic.twitter.com/6cSPrJzWjR
— ANI (@ANI) December 6, 2020