புகையிலைப் பொருள்களின் பாக்கெட்களின் மேல் புகைப்படத்துடன் கூடிய புதிய எச்சரிக்கை வெளியிடப்பட வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
சிகரெட் மற்றும் மற்ற புகையிலை பொருட்களை காண விதி 2008 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. அவ்வப்போது திருத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றது. இப்போதும் புகையிலை பொருட்களின் மீது புதிய சுகாதார எச்சரிக்கை வெளியிட வேண்டும் என்றும் அறிவித்துள்ளது. புகையிலை பொருட்களின் அட்டைகளில் 85% பகுதிகளில் புகைப்படத்துடன் கூடிய சுகாதார எச்சரிக்கையை அச்சிட வேண்டும்.
இதன் வாயிலாக அவற்றை பயன்படுத்துவதால் உடல் நல பாதிப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். கடந்த டிசம்பர் 1-ஆம் தேதிக்குப் பின் தயாரிக்கப்படும் அனைத்து பொருட்களின் பாக்கெட்டுகளிலும் புதிய சுகாதார எச்சரிக்கையை வெளியிடப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.