கேஜிஎப் -2 திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக இயக்குனர் பிரசாந்த் நீல் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
கடந்த 2018 இறுதியில் தமிழ் தெலுங்கு மலையாளம் என பல மொழிகளில் வெளியான திரைப்படம் கே ஜி எஃப். இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கிய இந்தப் படத்தில் நடிகர் யாஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது . இதையடுத்து இந்தத் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் கே ஜி எஃப்-2 என்ற பெயரில் தயாராகி வருகிறது . கொரோனா ஊரடங்கால் தாமதமான படப்பிடிப்பு ஆகஸ்ட் 26ஆம் தேதி மீண்டும் தொடங்கப்பட்டது.
சமீபத்தில் இந்த படப்பிடிப்பில் பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் இணைந்திருந்த புகைப்படமும் வெளியானது . இதையடுத்து இந்தப் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்க்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக இயக்குனர் பிரசாந்த் நீல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் படத்தின் நாயகன் யாஷ் மற்றும் வில்லன் சஞ்சய்தத் உள்ளிட்டோர் பங்குபெறும் கிளைமேக்ஸ் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டுவதாக பதிவிட்டுள்ளார்.
https://twitter.com/prashanth_neel/status/1335827495463968768