Categories
மாநில செய்திகள்

தனியார் மயமானதா…? மலை ரயில் அதிக கட்டணம் – அதிர்ச்சி…!!

மலை ரயிலில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதால் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக, மக்களின் நலன் கருதி மலை ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் தற்போது ஊட்டி மலை ரயில் இயங்க அனுமதி அளிக்கப்பட்டது. மேட்டுப்பாளையம் – ஊட்டி மலை ரயிலில் சாதாரண நாட்களில் ரூ.475 கட்டணம் வசூலிக்கப்பட்டது.

இந்நிலையில், டிசம்பர் 5-ஆம் தேதி தனியார் ஓட்டல் நிறுவனத்தில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இயக்கப்பட்ட மலை ரயிலில் ஒரு முறை பயண கட்டணமாக ரூ.3000 வசூலிக்கப்பட்டது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த ரயிலை இயக்க தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்டதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |