தமிழக கல்லூரிகள் இன்று திறக்கப்பட்ட நிலையில் பழைய பஸ் பஸ்களை மாணவர்கள் பயன்படுத்தலாம் என்று போக்குவரத்து துறை அமைச்சர் டாக்டர் எம் ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 8 மாதங்களாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு இருந்த நிலையில் கடந்த 2ஆம் தேதி முதல் ஆராய்ச்சி மற்றும் முதுகலை இரண்டாமாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டன.
இதை தொடர்ந்து இன்று முதல் தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் படி இளநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பழைய இலவச பஸ்பாஸ்களை பயன்படுத்தி பயணம் செய்யலாம் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.